சளி , இருமலை போக்க கூடியதும் , தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும் , மாதவிலக்கு பிரச்னையை தீர்க்கவல்லது கருஞ்சீரகம் . பிரசவத்துக்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க , குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து , ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை , மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும் . கர்ப்பப்பை வலி , சிரங்கு , கண்வலி போன்ற நோய்களுக்கும் , கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும் . கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது . எனவே வாரத்தில் சில நாட்கள் எடுத்துக் கொண்டால் உடல் நலனுக்கு சிறந்தது . கருஞ்சீரகம் , வெந்தயம் , ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து கருகாமல் வறுத்து பொடி செய்து , இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர வேண்டும் . இவ்வாறு செய்து வந்தால் தேவையற்ற கொழுப்பு நீங்குகிறது . ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது . கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் தேன் கலந்து ...
Comments
Post a Comment